22 கோடி ரூபாய் பெறுமதியான, போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

கணேமுல்ல – பொல்லதேயில்  22 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று (29)  மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். 

குறித்த பெண்ணை கைது செய்யும் போது, அவரிடமிருந்து 04 கிலோகிராமிற்கும் அதிகமான கொக்கேய்ன் மற்றும் 3450 இற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply