24 ஆண்டுகளின் பின் ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறவுள்ள ஒரு நாள் சர்வதேச கிண்ண கிரிக்கெட் தொடர்!

2027 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் சர்வதேச கிண்ண கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆப்பிரிக்க கண்டம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தென் ஆப்பிரிக்காவிலேயே அதிக எண்ணிக்கையிலான போட்டிகள் நடைபெறவுள்ளன.

44 போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில் மிகுதி 10 போட்டிகள் நபீமியா மற்றும் சிம்பாபே ஆகிய ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறவுள்ளன.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவினால் ஒரு நாள் சர்வதேச கிண்ணத் தொடர் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் 24 வருடங்களுக்குப் பின்னர் அங்கு சர்வதேச ஒருநாள் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply