299 மில்லியன் ரூபாய் நிதி செலவில் புனரமைக்கப்படவுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறை

 

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணி மற்றும் இறங்குதுறைக்கான வீதி மறுசீரமைப்பு பணிகள் நாளைய தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதியில் நாளைய தினம் சனிக்கிழமை காலை 09 மணிக்கு நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் , துறைமுகங்கள் , நெடுஞ்சாலைகள் , போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

சுமார் 299 மில்லியன் ரூபாய் நிதி செலவில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.  நிகழ்வில் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறை சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நன்றி

Leave a Reply