3வது நாளாக விமான சேவை பாதிப்பு – Athavan News

பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால், மூன்றாவது நாளாகவும் (22) விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையங்களின் செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளுக்கான தொழில்நுட்ப சேவையை வழங்கி வரும் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, லண்டன் ஹீத்ரோ, பெர்லின், பிரஸ்ஸல்ஸ் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமான புறப்பாடு, வருகை உள்ளிட்ட சேவைகள் தடைபட்டுள்ளன. பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இருந்து மட்டும் இன்று 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதைப் பற்றிய விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply