34 மில்லியன் ரூபா பெறுமதியான ‍ஹெரோயினுடன் இந்தியர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 34 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர் 32 வயதுடைய இந்தியர் ஆவார்.

அவர் நேற்று (26) மாலை சுமார் 4:15 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-315 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அதிகாரிகள், அவரது பயணப் பகை்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கிராம், 832 கிரேம் ஹெரோயின் போதைப்பொருளை கண்டுபிடித்தனர்.

முதன்முறையாக இலங்கைக்கு வந்த குறித்த நபர், பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ளூர் போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடம் ஹெராயின் கையிருப்பை ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெராயினுடன், சந்தேக நபர் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நன்றி

Leave a Reply