34 வருட கனவை நனவாக்கியது மேற்கிந்திய தீவுகள் அணி! – Athavan News

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை, சுமார் 34 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றி, மேற்கிந்திய தீவுகள் அணி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்திருந்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றது.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அதிகபட்சமாக அணித்தலைவர் Shai Hope ஆட்டமிழக்காமல் 120 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து 295 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தடிய பாகிஸ்தான் அணி
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சினை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 92 ஓட்டங்களை மட்டும் எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்மூலம் 202 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2ற்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

நன்றி

Leave a Reply