37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி! – Athavan News

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 33-வது ‘ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ண’ ஒருநாள் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

அந்த அணி சார்பாக அதிரடியாக விளையாடிய சங்கீர்த் 60 பந்துகளில் 45 ஓட்டங்களையும், உ.கென்றெக்சன் 38 ஓட்டங்களையும் பெற்றுத் தந்தனர்.

50 ஓவர்கள் நிறைவில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைக் குவித்தது.

பத்திரிசியார் கல்லூரி சார்பாகப் பந்துவீச்சில் ஜொலித்த ம.ஸ்ரிப் ஆதித்யா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

206 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பாடிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி, யாழ்ப்பாணக் கல்லூரியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

அந்த அணி சார்பாக றொ.பேர்ளி டெனோவன் அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றார்.

இறுதியில் 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பத்திரிசியார் கல்லூரி அணி 168 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 37 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இதேவேளை, போட்டியின் இறுதியில் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன: அதன்படி,
ஆட்டநாயகன் & சிறந்த துடுப்பாட்ட வீரராக சங்கீர்த் (யாழ்ப்பாணக் கல்லூரி)சகலதுறை ஆட்டநாயகன்: ஹரிசன் (யாழ்ப்பாணக் கல்லூரி) சிறந்த பந்துவீச்சாளர்: ஆதித்யா (பத்திரிசியார் கல்லூரி) சிறந்த களத்தடுப்பு வீரர்: டிலக்சன் (பத்திரிசியார் கல்லூரி) ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இதுவரை நடைபெற்ற ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத் தொடர்களில், புனித பத்திரிசியார் கல்லூரி 24 முறையும், யாழ்ப்பாணக் கல்லூரி 8 முறையும் வெற்றிக் கிண்ணத்தைச் சூடியுள்ளன.

ஒரு போட்டி முடிவு ஏதுமின்றி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply