5 ஆண்டு தண்​டனை: சிறையில் அடைக்கப்பட்டார் பிரான்ஸ் முன்​னாள் அதிபர் நிக்​கோலஸ் சர்​கோசி | Former French president Sarkozy begins 5-year prison sentence for campaign finance conspiracy

பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்​கோலஸ் சர்கோசி, தலைநகர் பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் கடந்த செப்.25-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

பிரான்​ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்​தலில் நிக்​கோலஸ் சர்​கோசி வெற்றி பெற்று அதிபரானார். அப்​போது தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக லிபி​யா​வின் அப்​போதைய அதிபர் மாமர் கடாஃபியிடம் இருந்து சட்​ட​விரோத​மாக நிதி பெற்​ற​தாக​வும், இதற்கு பிர​திபல​னாக, தனித்​து​விடப்​பட்ட லிபியா​வுக்கு சர்​வ​தேச அரங்​கில் பிரான்ஸ் ஆதர​வாக செயல்​படும் என நிக்​கோலஸ் சர்​கோசி உறு​தி​ அளித்ததாகவும் தெரியவந்தது.

இது தொடர்​பான வழக்​கில் அதிபர் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக லிபி​யா​விடம் நிதி பெற்​றது சட்​ட​விரோதம் என கூறிய நீதிப​தி​கள், சர்​கோசிக்கு 5 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிப்பதாக கடந்த செப்டம்பர் 25ம் தேதி தீர்ப்​பளித்​தனர். தன் மீதான குற்​றச்​சாட்​டு​களை மறுத்த சர்​கோசி, தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறினார்.

இந்நிலையில், பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் நிக்​கோலஸ் சர்​கோசி அடைக்கப்பட்டார். முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நான் ஒரு அப்பாவி.” என தெரிவித்திருந்தார்.

நிகோலஸ் சர்கோசியின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதையும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அவர் எதிர்த்துள்ளார்.

சிறைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்த நிகோலஸ் சர்கோசி, தனது மனைவியின் கைகளைப் பிடித்தவாறு நடந்து வந்தார். அவர் பொது வீதிக்கு வந்த உடன் அவரை சூழ்ந்து கொண்ட அவரது ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். தனது மகன், மகள், பேரக்குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்த சர்கோசி, பின்னர் காரில் ஏறி சிறைக்குப் புறப்பட்டார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக சர்​கோசி தனிமைச் சிறையில் அடைக்கப்படுவார் என்றும், மற்ற கைதிகள் அவரை நெருங்க முடியாது என்றும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். தனிமை வேதனையானதுதான் என்றாலும் அதனை எதிர்கொள்ள அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே சர்கோசியின் மேல் முறையீட்டு மனு மீதான உத்தரவை நீதிமன்றம் வழங்கும் என்றும் எப்படியும் இதற்கு இரண்டு மாதங்கள் வரை ஆகும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply