கொழும்பு-திருகோணமலை பிரதான வீதியின் தம்புள்ளை, வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்கள் ஒரு லொறி மற்றும் எதிர் திசையில் சென்ற ஒரு காருடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.