5 ஆயிரத்து 900 ஆயிரம் லீட்டர் எரிபொருளுடன் ஒருவர் கைது

 

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்து 900 ஆயிரம் லீட்டர் எரிபொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஊரெழு பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில்  பெருமளவான எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த களஞ்சிய சாலையை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுற்றுவளைத்தனர். அதன்போது 4700 லீற்றர் வரையிலான டீசலும் 800 லீற்றர் பெற்றோலும் 400 லீற்றர் மண்ணெண்ணெயும் கைப்பற்றப்பட்டது. அதனை அடுத்து களஞ்சியசாலை பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும்  காவல்துறையினா்  கைப்பற்றப்பட்ட  எரிபொருட்களுடன் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
#JaffnaFuelSeizure #IllegalFuelHoarding #UreluArea #JaffnaPolice #FuelCrisis2026

The post 5 ஆயிரத்து 900 ஆயிரம் லீட்டர் எரிபொருளுடன் ஒருவர் கைது appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply