5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான தேர்தல் திகதியை இன்று ( 15)மாலை 4 மணிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு, எதிர்வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

தேர்தல் இடம்பெற உள்ள மாநிலங்களுக்கு சென்ற தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் அரசுஅதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யும் பணி நிறைவடைந்த நிலையில்
இன்று ( 15) சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான தேர்தல் திகதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

அதன்படி, மேற்கு வங்கத்தில், ஐந்து முதல் ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட ஏனைய நான்கு மாநிலங்களில், ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐந்து மாநில சட்டசபை தேர்தலுடன், பல்வேறு மாநிலங்களில் வெற்றிடமாக உள்ள லோக்சபா, சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

நன்றி

Leave a Reply