500 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ், சுன்னாகம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதை மாத்திரைகளை இளைஞன் ஒருவர் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதாக சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் குறித்த இளைஞனை சோதனையிட்டனர்.

இதன்போது, இளைஞனின் உடமையில் இருந்து 500 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியதுடன், இளைஞனையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post 500 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது appeared first on LNW Tamil.

நன்றி

Leave a Reply