5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி! – Athavan News

இங்கிலாந்தின் கென்ட் (Kent) பகுதியில் மெனிஞ்சைடிஸ் (meningitis) நோய் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு முகவரகம் நாடு தழுவிய அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்தத் தொற்றுக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ள நிலையில், கேன்டர்பரியிலுள்ள இரவு விடுதி ஒன்றின் மூலமாகவே இது பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனை ஒரு ‘Super Spreader’ நிகழ்வாகக் கருதும் அதிகாரிகள், சுமார் 5,000 மாணவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகளைப் போர் கால அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது வரை 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக 6,500-க்கும் அதிகமானோருக்கு Antibiotics மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

காய்ச்சல் மற்றும் கண்களில் சிவப்பு நிறம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் கீர் ஸ்டார்மர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply