சென்னை: தமிழகத்தில் சில பகுதிகளில் 27-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங் களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இடையி டையே 60 கி.மீ. அளவில் காற்றின் வேகம் இருக்கும். எனவே, இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.