6 நாட்களுக்கு தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு | Moderate rain likely in some parts of Tamil Nadu for 6 days

சென்னை: தமிழகத்​தில் சில பகுதிகளில் 27-ம் தேதி வரை மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்​றில் வேக மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரண​மாக, தமிழகத்​தில் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேக மூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் மாலை அல்லது இரவு நேரங் களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இடையி டையே 60 கி.மீ. அளவில் காற்றின் வேகம் இருக்கும். எனவே, இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply