இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே மோடி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் குவாங்சௌ( Guangzhou) நகரத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பல்வேறு ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் விஜயம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவுகளில் புதிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக 2020ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற கோரத்தனமான இராணுவ மோதல் இருநாட்டு உறவுகளை கடுமையாகப் பாதித்திருந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடியில் சீன விஜயம் இந்திய -சீன உறவுகளை மீளாய்வு செய்யும் எனவும் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும் எனவும், மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், பிராந்திய நிலைமை தொடர்பான விவாதங்களுக்கு ஒரு புதிய திருப்பு முனையாக அமையும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறு இருப்பினும் மோடியின் சீன விஜயம் குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக எவ்விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.