22 கட்டங்களை கொண்ட இப்பருவ காலத்திற்கான motogp world championship தொடர் ஆரம்பமாகியுள்ளது. 16 கட்ட போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் 11 போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலையிலுள்ளார்.
அலெக்ஸ் மார்க்கஸ் இரண்டு வெற்றிகளையும், பன்யாய்யா, ஸார்கோ மற்றும் பெஸ்ஸியாய்ச்சி ஆகியோர் ஒவ்வொரு வெற்றிகளை பதிவு செய்துள்ள நிலையில் 16வது கட்ட போட்டி ஜப்பானின் ட்வின் ரிங் அரங்கில் நடைபெற்றது. 24 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த இப் போட்டியில் பன்யாய்யா முதலிடத்தில் தொடர்ந்தார். பெட்ரோ கொஸ்டா இரண்டாமிடத்திலும், மார்க் மார்க்கஸ் 3 மிடத்திலும் போட்டியை தொடர்ந்தனர்.
23 சுற்றுக்கள் எஞ்சியிருந்த நிலையில் எலெக்ஸ் மார்க்கஸ் 8 மிடத்தில் போட்டியை தொடர்ந்தார். ஏற்கனவே 11 வெற்றிகளை பெற்றுள்ள மார்க் மார்க்கஸ் அதிகபடியான புள்ளிகளை பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் வெற்றிகரமாக போட்டியை நிறைவு செய்யும் பட்சத்தில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் மார்க்கஸ் இப்பருவகாலத்தின் சம்பியனாக மாற்றமடைவார். இதனால் அரங்கில் மார்க்கஸின் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
23 சுற்றுக்கள் எஞ்சியிருந்த நிலையில் எலெக்ஸ் மார்க்கஸ் 7மிடத்திற்கு முன்னேறி அசத்தினார். 5வது சுற்றில் வைத்து சிறப்பாக செயற்பட்ட பெஸ்ஸியாய்ச்சி 5மிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.
11வது சுற்றில் வைத்து சிறப்பாக செயற்பட்ட மார்க் மார்க்கஸ் 2 மிடத்திற்கு முன்னேறி அசத்தினார். கொஸ்டா 3 மிடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.
14வது சுற்றில் வைத்து ஜோன் மிர் கொஸ்டாவை பின்னுக்கு தள்ளி 3மிடத்திற்கு முன்னேறி அசத்தினார். பெட்ரோ கொஸ்டா அதிர்ச்சியில் உரைந்தார்.
15வது சுற்றில் வைத்து மேலும் அதிர்;ச்சியளிக்கும் வண்ணம் பெஸ்ஸியாய்ச்சி கொஸ்டாவை பின்னுக்கு தள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டார். மறுபுறம் முதலிடத்தில் சென்றுக்கொண்டிருந்த பன்யாய்யாவின் வாகனத்தில் புகை வெளியேற தொடங்கியது. அணிக்குழுவினர் எதிர்ப்பார்க்காத நிலையில் பன்யாய்யா தொடர்ந்தும் முதலிடத்தில் சிறப்பாக செயற்பட்டார். பன்யாய்யா மற்றும் மார்க்கஸிற்கிடையிலான இடைவெளி குறைய தொடங்கியது.
5 சுற்றுக்களே எஞ்சியிருந்த நிலையில் பன்யாய்யா விடாது களத்தில் போட்டிபோட்டார். 3 சுற்றுக்களே எஞ்சியிருந்த நிலையில் பன்யாய்யா தனது போராட்டத்தை தொடர்ந்தார். இன்னும் 6 கட்ட போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் மார்க் மார்க்கஸ் 541 புள்ளிகளை பெற்றுள்ளதால் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தாலே அவர் இப்பருவகாலத்தின் சம்பியனாக மாற்றம் பெறுவார் அவருக்கும் இரண்டாமிடத்திலுள்ள எலெக்ஸ் மார்க்கஸிற்குமிடையில் 201 புள்ளிகள் இடைவெளிகள் காணப்படுகின்றன. ஆகையால் இனிவரும் போட்டிகள் என்பது மார்க் மார்க்கஸிற்கும் மேலதிக புள்ளிகளாகவே கருதப்படும்
இந்நிலையில் 24 சுற்றுக்களையும் 42 நிமிடங்கள் 09 செக்கன்களில் நிறைவு செய்து பன்யாய்யா முதலிடத்தை பெற்று ஜப்பானிய குரோன்ப்ரீயை கைப்பற்றினார். இரண்டாமிடத்தை மார்க் மார்க்கஸ் பெற்று motogp வரலாற்றில் 7வது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.
2025ம் ஆண்டின் motogp world championship பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் மார்க் மார்க்கஸ் என்பதும் குறிப்பிடதக்கது. முன்னாள் சம்பியன் வெலன்டினோ ரொஸ்ஸி 7 முறை சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள நிலையில் மார்க்கஸ் அதனை சமப்படுத்தி அசத்தினார்.
அதேநேரம் motogp வரலாற்றில் முன்னாள் ஜாம்பவான் ஜியாமோ அகோஸ்டினி 8 முறை சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளதே இதுவரை வரலாற்று சாதனையாக உள்ளமை குறிப்பிடதக்கது.