8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு கோவிலில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் மாதம் ரூ.39,900/- வரை || தேர்வு கிடையாது! Ekambareswarar Temple Chennai Recruitment 2026

Ekambareswarar Temple Chennai Recruitment 2026 தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை சென்னை 600003, தங்கசாலை தெரு எண். 115, சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள 08 சரக்கரை காப்பாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், ஓதுவார், கால்நடை பராமரிப்பாளர், ஸ்ரீபாதம் தாங்கி, சுயம்பாகி, மற்றும் தோட்ட பராமரிப்பாளர்  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
காலியிடங்கள் 08
பணிகள் எழுத்தர், அலுவலக உதவியாளர் என பல
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 27.01.2026
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://hrce.tn.gov.in/hrcehome/index.php

தமிழ்நாடு அரசு-இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
சரக்கரை காப்பாளர் 01
அலுவலக உதவியாளர் 01
இரவு காவலர் 01
தோட்ட பராமரிப்பாளர் 04
கால்நடை பராமரிப்பாளர் 01
ஓதுவார் 01
சுயம்பாகி 01
ஸ்ரீபாதம் தாங்கி 01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர் கல்வி தகுதி
சரக்கரை காப்பாளர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
அலுவலக உதவியாளர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
இரவு காவலர் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்
தோட்ட பராமரிப்பாளர் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்
கால்நடை பராமரிப்பாளர் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஓதுவார் தமிழ் அறிவு + அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஓதுவார் சான்றிதழ்
சுயம்பாகி தமிழ் அறிவு + நைவேத்தியம் & பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஸ்ரீபாதம் தாங்கி தமிழ் அறிவு + 2 ஆண்டுகள் முன் அனுபவம்

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர் மாதச் சம்பளம் (ரூ.)
சரக்கரை காப்பாளர் Rs.13,200 – Rs.41,800
அலுவலக உதவியாளர் Rs.12,600 – Rs.39,900
இரவு காவலர் Rs.11,600 – Rs.36,800
தோட்ட பராமரிப்பாளர் Rs.11,600 – Rs.36,800
கால்நடை பராமரிப்பாளர் Rs.11,600 – Rs.36,800
ஓதுவார் Rs.12,600 – Rs.39,900
சுயம்பாகி Rs.13,200 – Rs.41,800
ஸ்ரீபாதம் தாங்கி Rs.10,000 – Rs.31,500

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.01.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2026
  • படி 1: விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தல் hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும். (அல்லது கீழே உள்ள நேரடி லிங்க் மூலம் பெற்றுக் கொள்ளலாம்).
  • படி 2: விவரங்களைப் பூர்த்தி செய்தல் பதிவிறக்கம் செய்த படிவத்தை அச்சிட்டு (Print-out), அதில் கோரப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் பிழையின்றித் தெளிவாகப் பூர்த்தி செய்யவும்.
  • படி 3: சான்றிதழ்களை இணைத்தல் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் உங்களது கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
  • படி 4: விண்ணப்பத்தை அனுப்புதல் தயார் செய்யப்பட்ட விண்ணப்ப உறையின் மேல் “விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்” எனக் குறிப்பிட்டு, பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், சென்னைஅருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்திருக்கோயில், எண்.315, தாங்கசாலை தெரு, சென்னை- 60003.

முக்கியக் குறிப்புகள்:

  • கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27.01.2026 அன்று மாலை 5:45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.
  • தாமதமாக வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகள் அனைத்தும் உங்களிடம் உள்ளதா என்பதை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

நன்றி

Leave a Reply