தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் கட்டுப்பாடு திடீரென செயலிழந்த நிலையில், சாரதி மேற்கொண்ட துரிதமான நடவடிக்கையினால் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று திடீரென பிரேக்குகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து சாரதி துரிதமாக செயற்பட்டு ஒரு மண் மேட்டில் குறித்த பேருந்தை மோதியுள்ளார். இதனால், […]
