வென்னப்புவவில் உள்ள வெல்லமங்கரை கடற்றொழில் துறைமுகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது 870 கிலோ கிராம் இற்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 876.2 கிலோகிராம் சுறா மீன்கள் (அலோபியாஸ் வல்பினஸ்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீன்கள் மற்றும் கடற்றொழில் படகு ஆகியவை மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வென்னப்புவவில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் கடற்றொழில் விதிமுறைகளின் கீழ் சுறா மீன்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.
குறைந்து வரும் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக இவை பாதுகாக்கப்படுகின்றன.
