8வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை – ரூ.19,500 சம்பளம் || தேர்வு கிடையாது! TNRD Namakkal Recruitment 2025

TNRD Namakkal Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.11.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
காலியிடங்கள் 01 ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 07.11.2025
பணியிடம் நாமக்கல் மாவட்டம் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://namakkal.nic.in/

தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர் காலியிடங்கள்
ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) 01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் பின்வருமாறு:

  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் (Driving License) பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் பணியில் 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடையவர்கள்:

  • குறைந்தபட்ச வயது: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (TNRD) ஈப்பு ஓட்டுநர் பணிக்கான சம்பள விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • ஓட்டுநர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 19,500 முதல் ரூ. 62,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (நாமக்கல் மாவட்டம்) ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://namakkal.nic.in/-இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (அல்லது, கொடுக்கப்பட்டுள்ள பதிவிறக்க இணைப்பைப் பயன்படுத்தலாம்).
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அச்சு (Print out) எடுத்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகவும், சரியாகவும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான கல்விச் சான்றுகளின் நகல்களை இணைக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:ஆணையாளர்,ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,நாமகிரிப்பேட்டை,நாமக்கல் மாவட்டம் – 637406.

கடைசித் தேதி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 07.11.2025 தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை வந்து சேர வேண்டும்.

முக்கியக் குறிப்பு: தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply