8வது,12வது போதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – 240 காலியிடங்கள்; தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும் TNCSC Recruitment 2025

TNCSC Recruitment 2025: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள 240 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் போன்ற பணியிடங்கள் அடங்கும்.பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk) மற்றும் பருவகால உதவுபவர் (Seasonal Helper) ஆகிய பதவிகளுக்கு ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பருவகால காவலர் (Seasonal Watchman) பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 28.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விவரங்களை நீங்கள் இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்
TNCSC(Tamil Nadu Civil Supplies Corporation)
காலியிடங்கள் 240
பணிகள் பருவகால உதவுபவர்(Helper),
பருவகால காவலர்(Watchman)
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 28.11.2025 at 05.00 PM
பணியிடம் தஞ்சாவூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tncsc.tn.gov.in/

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர் காலியிடங்கள்
பருவகால உதவுபவர்
(Seasonal Assistant)
120
பருவகால காவலர்
(Seasonal Watchman)
120
மொத்தம் 240

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • பருவகால உதவுபவர் (Seasonal Assistant) பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பருவகால காவலர் (Seasonal Watchman) பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • SC & SCA/ST விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • BC/BC(M)/MBC விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்
  • OC விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
பதவி பெயர் சம்பளம்
பருவகால உதவுபவர் (Seasonal Assistant) Rs. 5,218 + DA (Rs.5087/-) +TA
பருவகால காவலர் (Seasonal Watchman) Rs. 5,218 + DA (Rs.5087/-) +TA

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.11.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2025

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் Resume மற்றும் உரிய சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மின்னஞ்சல் (Email-id) முகவரியினை விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அனைத்து தொடர்புகளும் (அழைப்பு கடிதம் போன்றவை) மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, விண்ணப்பத்தை நேரடியாகக் கீழ்க்கண்ட முகவரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்:

விண்ணப்பம் வந்து சேரவேண்டிய முகவரி:

Senior Regional Manager, Regional Office, Tamil Nadu Civil Supplies Corporation, No. 1, Sachithananda Moopanar Road, Thanjavur-613001.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 28.11.2025.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here

நன்றி

Leave a Reply