96 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஸ்கொட்லாந்து மருத்துவர்கள்!

ஊதியம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக ஸ்கொட்லாந்தின் வதிவிட மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

ஸ்கொட்லாந்தின் தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் தேசிய அளவில் வெளிநடப்பு செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. 

2008 ஆம் ஆண்டு ஊதியத்தை மீட்டெடுப்பதற்கான உறுதிமொழியை அரசாங்கம் மீறிவிட்டதாக வதிவிட மருத்துவர்களின் தொழிற்சங்கமான பி.எம்.ஏ ஸ்கொட்லாந்து குற்றம் சாட்டியது.

இதனால், வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 92 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர். 

இதன்படி, எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 07:00 மணி முதல் ஜனவரி 17 சனிக்கிழமை காலை 07:00 மணி வரை வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஜூனியர் மருத்துவர்கள் என்று அழைக்கப்பட்ட வதிவிட மருத்துவர்கள் ஸ்கொட்லாந்தில் உள்ள மருத்துவப் பணியாளர்களில் சுமார் 50 சதவீதமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply