AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை! – Athavan News

நிதித் திட்டங்களை ஆதரிப்பதாக தனது உருவத்தைப் பயன்படுத்தி செயற்றை நுண்ணறிவு (AI) மூலமாக உருவாக்கப்பட்ட போலியான விளம்பரக் காணொளி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன பொது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விளம்பரங்கள் முற்றிலும் போலியானவை என்றும், இதுபோன்ற மோசடிகளுக்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“தயவுசெய்து இவற்றை நம்பாதீர்கள். எனக்கு எந்த முதலீடு அல்லது நிதி விளம்பரங்களுடனும் எந்த தொடர்பும் இல்லை. இந்த காணொளிகள் AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டவை” என்றும் மஹேல ஜெயவர்தன தெளிவுபடுத்தினார்.

இதுபோன்ற மோசடிகளால் குறிவைக்கப்பட்ட அண்மைய இலங்கை விளையாட்டு நபர் மஹேல ஜெயவர்தன ஆவர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜெயசூர்யா ஆகியோர், இதேபோன்ற AI ஆல் உருவாக்கப்பட்ட காணொளிகள் குறித்து முன்னதாக பொது மக்களுக்கு எச்சரித்துள்ளனர்.

அந்த விளம்பரங்கள், போலி நிதி முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக தங்கள் உருவங்களை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் எடுத்துரைத்திருந்தனர்.

AI-உருவாக்கும் மோசடி காணொளிகளை அடையாளம் காண பின்வரும் அறிகுறிகளைக் கவனிக்குமாறு அதிகாரிகளும் சைபர் பாதுகாப்பு நிபுணர்களும் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்:

  1. முக அசைவுகள் & உணர்ச்சிகள்
  • உதட்களின் அசைவு குரலுடன் சரியாக பொருந்தாமல் இருக்கலாம்
  • கண் இமைப்பு (blink) இயல்பற்றதாக / குறைவாக இருக்கும்
  • முக உணர்ச்சிகள் (expression) செயற்கையாக தோன்றும்
  1. முக–உடல் பொருத்தம்
  • முகம் மட்டும் தெளிவாக, உடல்/பின்புலம் மங்கலாக இருக்கும்
  • தலை அசையும்போது முக எல்லைகள் (edges) மாறும்
  1. குரல் சோதனை
  • குரல் இயந்திரம் போல ஒரே சீராக இருக்கும்
  • உணர்ச்சி ஏற்ற இறக்கம் (tone variation) குறைவு
  • வாயசைவு–குரல் தாமதம் (lip-sync issue)
  1. வீடியோ தரம் & விவரங்கள்
  • காதுகள், பற்கள், விரல்கள் சரியாக வடிவமைக்கப்படாமல் இருக்கலாம்
  • ஒளி (lighting) முகத்தில் ஒரே மாதிரி இல்லாமல் மாறும்
  • பின்னணி பொருட்கள் வளைந்து/மாறி தோன்றும்
  1. உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை

 

 

நன்றி

Leave a Reply