BCCI தலைவராகும் சச்சின் டெண்டுல்கர்?

முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், புதிய பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்பு, பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த ரோஜர் பின்னி சமீபத்தில் 70 வயதை கடந்ததால், விதிகளின்படி பதவியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

சச்சினுடன் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன்–டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரின் போது ஆலோசனை நடைபெற்றதாகவும், அவர் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply