17 கிலோ போதைப்பொருளுடன் கனேடியர் பிடிபட்டான்

ரூ. 40 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் இலங்கை வந்த கனடா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (25) அதிகாலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் எதையும் அறிவிக்கப்பட வேண்டிய தேவையற்ற ‘கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோது,…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய பிரஜை ஒருவர் போதைப் பொருளுடன் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 12 கிலோ கிராம் 196 கிராம் நிறையுடைய ஹஷீஷ் மற்றும் ஐந்து…

நான் 8 மாசம் வயிற்றில் இருக்கும்போதே, அப்பாவை கொண்டு போய்விட்டார்கள்

அப்பாவை விடுதலை செய்யுமாறு இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் எவரும் விடுதலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த அரசாங்கமாவது தங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று (24) இடம்பெற்ற…

இது அரசியல் நோக்கமல்ல, சமூக நோக்கம், அனைவரும் இதற்கு பங்களிக்க வேண்டும் – ஜனாதிபதி

உத்தேச கல்வி சீர்திருத்தம் வெறும் பாடத்திட்டத்தை திருத்துவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், அதே நேரத்தில் நாட்டின் முழு சமூக  மட்டத்தையும் பொருளாதார மட்டத்தையும் ஒரேயடியாக உயர்த்தும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இது ஒரு அரசியல் நோக்கிலான திட்டமன்றி…

கிணற்றிலிருந்து தாய் – இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்பு

4   முல்லைத்தீவு மாவட்டம்  மாங்குளம்  காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கும் அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் முல்லைத்தீவு  மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன்…

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஜீப் ரக வாகன கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய விசாரணைக்காக அவர் மதுகம நீதிமன்றில் இன்று…

அரசாங்க துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

2010 முதல், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் இளம் நிர்வாக மட்ட பொது அதிகாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு முதுகலை திட்டங்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் தீவிரமாக ஆதரவளித்து வருகிறது. இந்த புலமைப்பரிசில்கள் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களுக்கான ஜப்பான் மானிய உதவி (JDS) திட்டத்தின்…

பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர்

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை…

பாடசாலைகளின் நிலவரம் – அதிர்ச்சிகரமான விபரங்களை வெளியிட்டார் ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் இன்று (24)  உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை வெளியிட்டார். 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு, 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 உள்ளன.…

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு திறைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.…