தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்…

வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெறும் கைதியின் சகோதரிக்கு எதிராக சிறைச்சாலை நிர்வாகம் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் விளக்கமறியல் கைதியின் சகோதரிக்கு எதிராக , யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகத்தினரால் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பை சேர்ந்த இளைஞன் ஒருவர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற…

இலங்கை அனர்த்தம், சுவிஸ் விமானத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்.

கொழும்பில் இருந்து, மனிதாபிமானத்திற்கு புகழ்பெற்ற சுவிஸ் நோக்கி 06-12-2025  அன்று Edelweiss விமானம் பறந்து கொண்டிருந்தது. என் அருகே வந்த படத்தில் உள்ள இந்தப் பெண்  தானும், தனது கணவனும் இலங்கையில் தங்கியிருந்த போது அனர்த்தம் நிகழ்ந்ததாகவும்,  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு…

உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகளுக்கு இடமளிக்கப்படாது – வட மாகாணர் ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ அல்லது ஊழலுக்கோ இடமளிக்கப்படாது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உதவித்தொகை வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து அவர் நேற்று அறிக்கை வெளியிட்டார்.…

🚨 கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது!

32 🚨 கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது! #போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம் புத்தளம், கற்பிட்டி – இப்பன்தீவு கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சுமார் 78 கிலோகிராம்…

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இன்று 06.12.2025 இரவு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து தெஹிவளை பொலிஸ்…

📢 மலையகத்தைச் சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை – ஜனாதிபதி!

7 கண்டி: அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டுப் பொறிமுறை அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று (06) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்…

திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் குழாய் இணைக்கும் பணி முன்னெடுப்பு!

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150 மீற்றருக்கு…

நீர் விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு

அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். அனர்த்த நிலைமை காரணமாக நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான…

71 நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு – Oruvan.com

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி.…