CID யில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அழைப்பு!

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் போது முன்னாள் அமைச்சர்களும் இவ்வாறு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதாகாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஜுன் மாதம் 11ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக கடந்த ஜுன் மாதம் 11ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இதேவேளை கடந்த 4ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக செயலாளரான சாண்ட்ரா பெரேராகுற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் பணிக்குழு தலைவர் சாகல ரத்நாயக்க நிதி மோசடி விசாரணைப் பிரிவில் கடந்த 06ஆம் திகதி மன்நிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply