முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் நேற்று (15) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் அவருக்கு இதயத்துடன் தொடர்புடைய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி சுமார் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த மருத்துவ சிகிச்சைக்கான முழு செலவையும் இந்தியா ஏற்கத் தயாராக இருந்ததாகவும், ஆனால் அந்த முன்மொழிவை ரணில் விக்ரமசிங்க மரியாதையுடன் நிராகரித்து, தனிப்பட்ட செலவில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

