FIFA U17 World Cup 2025: கத்தார் அணியின் லீக் போட்டிகள் அட்டவணை வெளியீடு!

கத்தாரில் நடைபெறவுள்ள FIFA U17 World Cup 2025 கால்பந்துத் தொடருக்கான போட்டி அட்டவணை (Match Schedule) தற்போது வெளியாகியுள்ளது.

போட்டி நடத்தும் நாடான கத்தார் அணி ‘ஏ’ பிரிவில் (Group A) இடம்பிடித்துள்ளது.

அணியின் மூன்று லீக் போட்டிகளும் நவம்பர் மாதம், தோஹாவில் உள்ள (Aspire Zone – Pitch) அஸ்பையர் ஸோன் – பிட்ச் 7 மைதானத்தில் நடைபெற உள்ளன.

அனைத்துப் போட்டிகளும் கத்தார் நேரப்படி மாலை 6:45 மணிக்கும் (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 9:15 மணிக்கும்) ஆரம்பமாகவுள்ளன.

அதன்படி, நவம்பர் 03, ஆம் திகதி கத்தார் vs இத்தாலி அணிகளும், நவம்பர் 06, ஆம் திகதி கத்தார் vs தென்னாப்பிரிக்கா அணிகளும் நவம்பர் 09, ஆம் திகதி பொலிவியா vs கத்தார் அணிகளும் பங்கேற்கவுள்ளன.

இதேவேளை, தமது முதல் போட்டியில் பலம் வாய்ந்த இத்தாலி அணியை எதிர்கொள்வது, கத்தார் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply