ITN இடம் 10 கோடி ரூபாய் கேட்கும் தென்னக்கோன்

தன்னை அவதூறாகப் இடம் 10 கோடி ரூபாய் கேட்கும் தென்னக்கோன்  அரச தொலைக்காட்சியான  (ITN) க்கு எதிராக 10 கோடி ரூபாயை நஷ்ட ஈடாகக்கோரி  ரஜித் கீர்த்தி தென்னக்கோன்  கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.


2025 ஜனவரி 9 அன்று ஒளிபரப்பப்பட்ட செய்தி அறிக்கையிலும், ஜனவரி 10 அன்று ஒளிபரப்பப்பட்ட ‘பத்தரென் எஹா’ (Pattaren Eha) காலை நிகழ்ச்சியிலும் வெளியான கருத்துக்களுக்காக இந்த சட்ட கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.


விவசாய அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஒரு ஊடகச் சந்திப்பின்போது வெளியிட்ட கருத்துக்களும், நிகழ்ச்சி தொகுப்பாளரின் மேலதிக கருத்துக்களும் பொய்யானவை மற்றும் அவதூறானவை என்று அந்த சட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தன்னை ஊழல்வாதியாகவும் நேர்மையற்றவராகவும் சித்தரித்து, அவதூறு ஏற்படுத்தும் நோக்குடன் இந்த உள்ளடக்கம் ஒளிபரப்பப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சட்ட கடிதம் குறித்து ITN இதுவரை எந்தவொரு பதிலையும் வெளியிடவில்லை.

நன்றி

Leave a Reply