JVP கூட்டத்தில் 2 பேரை 2011 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்ற வழக்கில், குற்றவாளியாகக் காணப்பட்ட ஜூலம்பிடிய அமரேவுக்கு தங்காலை மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (07) உறுதி செய்தது.
ஜி.ஜி. அமரசிறி அல்லது ஜூலம்பிடிய அமரே தாக்கல் செய்த சிறப்பு மேன்முறையீட்டு மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.