இலங்கையில் இருவரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாகச் சந்தேகிக்கப்படும் ‘ஒன்டன்செட்ரான்’ (Ondansetron) ஊசி மருந்தின் நான்கு தொகுதிகள் மீளப் பெறப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அதன் விசாரணை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
குறித்த மருந்தைத் தயாரித்த இந்திய நிறுவனம், தனது சொந்தச் செலவில் சுயாதீன பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி கோரியும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை இன்னும் அதற்கு அனுமதி வழங்கவில்லை என மருத்துவ நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நவீன ஆய்வக வசதிகள் இல்லாமையினால் விசாரணை தாமதமடைவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
