QR குறியீடு முறை மூலம் விவசாயிகளுக்கு உர மானியம்! – Athavan News

தேயிலை விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்குவதற்கான QR குறியீடு முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த முயற்சிக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டம் செப்டம்பர் 26 ஆம் திகதி மதுகமவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான தேயிலை உர மானிய திட்டத்திற்காக தேயிலை சபை 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதில், ரூ.200 மில்லியன் புதிய QR குறியீடு முறையின் கீழ் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply