இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்
1. புதிய பயனர்கள் பதிவு செய்வது எப்படி?
நீங்கள் புதிய வாகன உரிமையாளர் என்றால் அல்லது இதற்கு முன் பதிவு செய்யவில்லை என்றால்
fuelpass.gov.lk என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
பின்னர் , Register என்பதை அழுத்தவும்
இப்போது உங்களது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் மற்றும்
கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உள்ளிடவும்.
தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு (NIC) பதிலாக கடவுச்சீட்டு (Passport) அல்லது வணிக பதிவு இலக்கத்தைப் (Business Registration Number) பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
பிறகு உங்கள் கையடக்கத்தொலைபேசிக்கு வரும் இரகசிய குறியீட்டை (OTP) உள்ளிட்டு
Verify என்பதை அழுத்தவும்
பின்னர் உங்களது பெயர் மற்றும் முகவரிகளையும் பதிவு செய்து Next என்பதை அழுத்தவும்
இப்போது உங்களுடைய வாகன இலக்கம், Chassis இலக்கம் மற்றும் எரிபொரு வகையை உள்ளிடவும்.
பின்னர் கீழே உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறேன் என்ற பெட்டியை
கிளிக் செய்ய மறக்காதீர்கள்
இப்போது Register என்பதை அழுத்தி QR ஐ பதிவிறக்கம் செய்யலாம்
பதிவு முடிந்ததும் உங்கள் QR குறியீடு திரையில் தோன்றும்.
அதனைத் Screenshot எடுத்துக்கொள்ளவும் அல்லது அச்சிட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில்
காண்பித்து எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம்.

2.ஏற்கனவே QR குறியீட்டைப் பதிவுசெய்த பயனர்கள்
வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில், https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.
வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியிருப்பின், அதே இணையத்தளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
Post Views: 3
