Rebuild Sri Lanka நிதியத்திற்கு 4 பில்லியனுக்கும் அதிகமான நிதி நன்கொடை

Rebuild Sri Lanka நிதியத்திற்கு இதுவரையில் 4,286 மில்லியன் ரூபாவுக்கும் (4.2 பில்லியன் ரூபா) அதிகமான நிதி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகையில் 4,263 மில்லியன் ரூபா உள்நாட்டு வர்த்தகர்கள் ஊடாகக் கிடைத்துள்ளதுடன், எஞ்சிய தொகை வெளிநாட்டு நாணயங்கள் ஊடாக நேரடியாக வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெறப்பட்ட மொத்த நிதியின் டொலர் பெறுமதி 13.8 மில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், அதில் வெளிநாட்டு நாணயங்கள் ஊடாக மாத்திரம் பெறப்பட்ட தொகை 6 மில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது.

வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, ஜேர்மனி, பூட்டான், இத்தாலி, கனடா, ஐக்கிய அரபு இராச்சியம், நியூசிலாந்து, மாலைத்தீவு, சவுதி அரேபியா, பிரான்ஸ், கொரியா உள்ளிட்ட 43 நாடுகளிலிருந்து இந்த உதவித்தொகை கிடைத்துள்ளதாக சூரியப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

 

நன்றி

Leave a Reply