சென்னையிலுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் வீட்டை திராவிட முன்னேற்றக்கழக மாணவர் அணியினர் முற்றுகையிட்டுள்ளனர்.
கரூரில் நேற்று இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணைக்குழுவை அமைத்துள்ளது.
பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் நீட்சியாக த.வெ.க தலைவர் விஜயை கைது செய்ய கோரி ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந் நிலையில், சென்னையில் பனையூரில் உள்ள விஜய் வீட்டை திராவிட முன்னேற்றக்கழக மாணவர் அணியினர் முற்றுகையிட்டுள்ளனர்.
குழந்தைகளின் உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று விஜய்க்கு எதிராக போராட்டக்காரர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கரூரில் இடம்பெற்ற துயரமான சம்பவம் வேதனையளிப்பதாக டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
கரூரில் நடந்த துயரமான சம்பவம் வேதனையளிக்கிறது எனவும் இதில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.