1960-ஆம் ஆண்டு, மருத்துவமனை காவலர்களின் அலட்சியத்தால் அப்பாஸிய்யா மனநல மருத்துவமனையில் இருந்து (எகிப்து) மனநலம் பாதிக்கப்பட்ட 243 பேர் தப்பிச் சென்றனர். தெருக்களில் அவர்கள் அலைந்ததால் பெரிய பிரச்சினை ஏற்பட்டது.
நிர்வாக இயக்குனர், உடனடியாக மருத்துவ நிபுணர் டாக்டர் கமலை வரவழைத்து, பிரச்சினையை எப்படியாவது தீர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.
அவர் என்ன செய்தார்…?
ஒரு விசிலையும் சில ஊழியர்களையும் அழைத்துக்கொண்டு தெருவுக்கு வந்தார்.
ஒருவரோடு ஓருவர் பின்னால் இருந்து பிடித்தவாறு ரயில் விளையாட்டு விளையாடுமாறு ஊழியர்களிடம் கூறினார்.
ஒருவர் விசில் அடித்து “டூட்.. டூட்..” என்று சொல்ல, அவருக்குப் பின்னால் ரயில் பெட்டிகளைப் போன்று ஒருவரையொருவர் பிடித்தவாறு வீதியில் சென்றனர்.
மருத்துவர் கமல் என்ன கணித்தாரோ அது நடந்தது.
ஆம். தப்பியோடிய ஒவ்வொரு பைத்தியமும் அந்த ரயிலில் ஏறியது. அவர்களை சுற்றி வளைத்த டாக்டர் கமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் வெற்றி பெற்றார்.
இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.
பிரச்சினை எப்போது துவங்கியது தெரியுமா…? தப்பியோடிய பைத்தியங்கள் மொத்தம் 243 தான்!
ஆனால் ரயில் பயணத்தின் மூலம் மருத்துவமனைக்கு திரும்பியவர்களோ 612 பேர்.
மீதிப் பைத்தியங்கள் எங்கிருந்து வந்தனர்? தெரியாது. அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவமனை நிர்வாகம் திகைத்தது.
அதே சம்பவம் மீண்டும் இப்போது நடந்தால், அந்த ரயிலில் எத்தனை நபர்கள் ஏறுவார்கள்?!
ஆண்டவனே….! நினைக்க… நினைக்க…
நூஹ் மஹ்ழரி