அத்து மீறிய ட்ரோன் ஊடுருலால் ஜெர்மன் விமான சேவை பாதிப்பு!

ஜெர்மனின் மியூனிக் விமான நிலையத்தில் வியாழக்கிழமை (02) மாலை சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் பறந்ததை அடுத்து, விமானப் போக்குவரத்து  நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

இதன் விளைவாக, 17 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், ஜெர்மன் நகரில் சுமார் 3,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

அத்துடன், மியூனிக் விமான நிலையம் மேலும் 15 விமானங்களை அருகிலுள்ள நகரங்களுக்கு திருப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, மியூனிச்சில் தரையிறங்க வேண்டிய விமானங்களை ஸ்டட்கார்ட், நியூரம்பெர்க், வியன்னா மற்றும் பிராங்பேர்ட்டுக்கு திருப்பி அனுப்பி விடப்பட்டன.

ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து உடனடியாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போலந்து, ருமேனியா, லாத்வியா, எஸ்டோனியா மற்றும் டென்மார்க் உள்ளிட்ட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அண்மையில் அத்து மீறிய ட்ரோன் நடவடிக்கைகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

நன்றி

Leave a Reply