30
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக வழங்கப்படவுள்ள விரிவான நிவாரணங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், டொலரின் பெறுமதியை நிலையாகப் பேணவும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி உதவியை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக அறிவித்த முக்கிய நிவாரண விபரங்கள் பின்வருமாறு:
🏠 வீட்டு வசதி மற்றும் வாழ்வாதாரம்
-
மாதாந்த கொடுப்பனவு: முழுமையாக/பகுதியளவில் சேதமடைந்த மற்றும் NBRO பரிந்துரையால் வெளியேற்றப்பட்ட சுமார் 17,648 வீடுகளுக்கு, 3 மாத காலத்திற்கு மாதம் 50,000 ரூபாய் வழங்கப்படும்.
-
சுத்திகரிப்பு உதவி: வீடுகளைச் சுத்தப்படுத்த தலா 25,000 ரூபாய்.
-
உபகரணங்கள்: தளபாடங்கள் மற்றும் அடிப்படை உபகரணங்களை கொள்வனவு செய்ய 50,000 ரூபாய்.
-
மாணவர் உதவி: பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தலா 25,000 ரூபாய்.
🌾 விவசாயிகளுக்கான நட்டஈடு (ஹெக்டேயர் ஒன்றுக்கு)
-
நெல், சோளம், தானியங்கள்: 150,000 ரூபாய்.
-
மிளகாய், வெங்காயம், பப்பாளி, வாழை: 200,000 ரூபாய்.
-
மிளகு, ஏலக்காய், கோப்பி போன்ற பயிர்களுக்கும் விசேட நட்டஈடு வழங்கப்படும்.
🐄 கால்நடை வளர்ப்பு
-
கலப்பினப் பசு (ஒன்றுக்கு): 200,000 ரூபாய் (அதிகபட்சம் 10 பசுக்கள்).
-
நாட்டுப் பசு (ஒன்றுக்கு): 50,000 ரூபாய் (அதிகபட்சம் 20 பசுக்கள்).
-
ஆடு, பன்றி, செம்மறியாடு: தலா 20,000 ரூபாய்.
-
கோழி வளர்ப்பு: முட்டையிடும் கோழிக்கு 500 ரூபாயும், இறைச்சிக் கோழிக்கு 250 ரூபாயும் வழங்கப்படும்.
⚓ மீனவர்களுக்கான உதவிகள்
-
மீன்பிடி உபகரணங்களை இழந்தவர்களுக்கு 100,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்.
-
படகுகளைச் சீர்செய்ய ‘சீனோர்’ நிறுவனம் மூலம் இலவசத் திருத்தப்பணிகள்.
-
தோணிகளை இழந்தவர்களுக்கு 100,000 ரூபாய் ரொக்கப்பணம்.
🏭 வர்த்தகம் மற்றும் கைத்தொழில்
-
பதிவு செய்யப்பட்ட 9,600 கைத்தொழில் நிலையங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய்.
-
சிறிய கைத்தொழில்களுக்கு 2.5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரையும், பெரிய கைத்தொழில்களுக்கு 25 மில்லியன் ரூபாய் வரையும் நிதி உதவி.
மக்களின் துயர் துடைத்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
#AnuraKumaraDissanayake #PresidentLK #DisasterRelief #SriLanka #ReliefPackage #SriLankaParliament #EconomicRecovery #PeopleFirst #NationalSolidarity #LKA
