இரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
தெஹ்ரான் / வாஷிங்டன், மார்ச் 25:
இரான், அமெரிக்காவின் USS Abraham Lincoln என்ற விமானக் கப்பலை நோக்கி க்ரூஸ் ஏவுகணைகள் ஏவியதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை எனத் தெஹ்ரான் இராணுவம் மறுத்த சில மணி நேரங்களுக்குப் பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இரான் புரட்சிகர காவல் படையுடன் (IRGC) நெருங்கிய தொடர்புடைய Fars News Agency வெளியிட்ட தகவலின்படி, இந்த ஏவுகணை தாக்குதல் அமெரிக்க கடற்படையை தனது நிலைப்பாட்டை மாற்றத் திணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) இதற்கு உடனடி பதில் அளிக்கவில்லை.
அரேபியக் கடலில் தங்கியுள்ள USS Abraham Lincoln கப்பல், “Operation Epic Fury” என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை நான்காவது வாரத்தை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இரான் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை எங்கள் விமானக் கப்பலுக்கு எதிராக ஏவியது. ஆனால் அவற்றை அனைத்தும் வெற்றிகரமாக தடுக்கப்பட்டன” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா முன்வைத்த 15 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை இரான் நிராகரித்துள்ளது. அணு ஆயுத திட்டத்தை கைவிடுதல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைத்தல் உள்ளிட்ட நிபந்தனைகள் இதில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, அனைத்து தடைகளையும் நீக்குதல் மற்றும் பெர்சியக் வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்களை மூடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை இரான் முன்வைத்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் படைகள் தெஹ்ரானில் “பல கட்ட தாக்குதல்கள்” மேற்கொண்டதாகவும், மேலும் தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளன. முன்னதாக, ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள கடற்படை உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இராணுவ வசதிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பெப்ரவரி 28 முதல் தொடங்கிய இந்த மோதல்களில், இஸ்ரேல் இதுவரை 15,000க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ஈரானுக்கு எதிராக மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு, இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தைகள் எந்தவித முன்னேற்றத்தையும் காணவில்லை என்பது சர்வதேச சமுதாயத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
The post அமெரிக்காவின் USS ஆப்ரகாம் லிங்கனுக்கும் ஆபத்தா? appeared first on Global Tamil News.
