மின்சார வாகனங்களின் (EV) இதயமாகக் கருதப்படும் லித்தியம் தாது, அமெரிக்காவின் நெவாடா – ஓரிகான் எல்லையில் அமைந்துள்ள மெக்டெர்மிட் கால்டெரா (McDermitt Caldera) எனும் பழங்கால எரிமலைப் பள்ளத்தில் அதிகளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக, அங்குள்ள களிமண் அடுக்குகளில் இந்த லித்தியம் படிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சந்தை மதிப்பின்படி இதன் மதிப்பு சுமார் 1.5 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் பல லட்சம் கோடி ரூபாய்) என கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது லித்தியம் உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த கண்டுபிடிப்பு அமெரிக்காவின் பேட்டரி உற்பத்தித் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post அமெரிக்காவில் கண்டறியப்பட்ட “வெள்ளை தங்கம்”: 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான லித்தியம் புதையல்! appeared first on Global Tamil News.
