அமெரிக்காவில் சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
எல் சால்வடாரில் இருந்து அமெரிக்கா வந்த ஒரு நோயாளிக்கு நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவோர்ம் (New World screwworm) மயாசிஸ் (myiasis) இருப்பது கண்டறியப்பட்டது.
NWS மயாசிஸ் என்பது ஒட்டுண்ணி ஈக்களால் ஏற்படும் ஈ லார்வாக்கள் அல்லது புழுக்களின் ஒட்டுண்ணி தொற்று ஆகும்.
NWS ஈ லார்வாக்கள் (புழுக்கள்) ஒரு உயிருள்ள விலங்கின் சதைக்குள் துளையிடும்போது, அவை விலங்குக்கு ஆபத்தான சேதத்தை ஏற்படுத்துகின்றன என்று அமெரிக்க விவசாய திணைக்களம் (United States Department of Agriculture) தெரிவித்துள்ளது.
கால்நடைகள், செல்லப்பிராணிகள், வனவிலங்குகள், எப்போதாவது பறவைகள் மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில், மக்களைத் பாதிக்ககூடும். உயிருள்ள திசுக்களை உண்ணும் புழுக்கள் தென் அமெரிக்கா மற்றும் கரீபியனில் காணப்படுகிறன. அதன் பரவலைத் தடுக்கும் முயற்சிகள் இருந்தபோதிலும், மெக்ஸிகோ உட்பட ஒவ்வொரு மத்திய அமெரிக்க நாட்டிலும் இந்த புழுக்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.