அமெரிக்காவின், புரூக்லின் பகுதியிலுள்ள உணவகமொன்றில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்ததோடு, 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை உணவகம் மூடப்படும் நேரத்தில் குறித்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கிதாரிகள் குறித்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன்
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.