மலையக ரயில் மார்க்கத்தில் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து தொடர்ந்து ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
அம்பேவல மற்றும் நானுஓயா இடையேயான ரயில் மார்க்கத்தை சீரமைக்கும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ‘பேலஸ்ட்’ (Ballast) ரயில் , இன்று அதிகாலை 1 மணியளவில் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கு அருகே தடம் புரண்டது.
குறித்த ரயில் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் தற்போது பதுளை மற்றும் அம்பேவல ஆகிய நிலையங்களுக்கு இடையே மாத்திரம் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது .
Post Views: 0
