அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ரணில் தலைமையில் ஆராய்வு

ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட பேச்சு (10) நடைபெற்றது. கொழும்பு ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

அநுர பிரியதர்ஷன யாப்பா,  உதய கம்மன்பில, சஞ்ஜீவ எதிரிமான்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் தற்போதைய அரசாங்கத்துக்கு ஒரு வருடம் நிறைவடைவதையொட்டி, அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படவுள்ள எதிர்ப்புப் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply