தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக சூழ்ச்சிகள் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உண்டு என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான சதித் திட்டங்கள் சூழ்ச்சிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது, அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டு, கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் களவுகள் என்பன விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அரசாங்கத்தினால் முன்னெடுக்க்பபட்டு வரும் திட்டத்தினால் சில தரப்பினர் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை தூண்டி விட்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சித்து வருவதாக டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.