அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Stalin inaugurated chennai institute of journalism it in Kotturpuram on behalf of the govt

சென்னை: சென்னை இதழியல் நிறு​வனத்தை கோட்​டூர்​புரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: செய்​தித் துறை மானியக் கோரிக்​கை​யில், இதழியல் துறை​யில் பயிற்​சி, ஆராய்ச்சி மற்​றும் ஊடகக் கல்வி மேம்​பாட்​டுக்கு ஒருமுதன்​மை​யான கல்வி நிறு​வனத்தை நிறு​வி, அதன்​மூலம் ஆர்​வம் மிகுந்த இளம் திறமை​யாளர்​களை ஊக்​குவிக்​க​வும், இதழியல் மற்​றும் ஊடக ஆய்​வியலில் தரமான கல்​வியை வழங்​கும் வகை​யிலும், இதழியல் மற்​றும் ஊடக​வியல் கல்வி நிறு​வனம் இக்​கல்​வி​யாண்டு முதல் தொடங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி, இதழியல் துறை​யில் ஆர்​வ​முள்ள இளைய தலை​முறை​யினரை ஊக்​குவிக்​கும் நோக்​குட​னும், தற்​போது வளர்ந்து வரும் தொழில்​நுட்ப வளர்ச்​சிக்​கேற்ப, ஊடகக் கல்​வியை வழங்​கு ​வதற்​காக​வும், தமிழகத்​தைச் சேர்ந்த இளைய தலை​முறை​யினருக்கு குறைந்த கட்​ட​ணத்​தில், ஓர் ஆண்டு இதழியல் முது​நிலை பட்​டயப் படிப்பு வழங்​கப்பட உள்​ளது. இதற்​காக, சென்​னை, கோட்​டூர்​புரத்​தில் அண்ணா நூற்​றாண்டு நூல​கம் அரு​கில் தமிழக அரசு சார்​பில் சென்னை இதழியல் கல்வி நிறு​வனம் அமைக்​கப்​பட்​டு, அதற்​காக ரூ.7.75 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிறு​வனத்​தில் இதழியல் முது​நிலை பட்​டயப் படிப்பு இந்த கல்​வி​யாண்டு முதல் (2025-26) தொடங்​கப்​படு​கிறது. இங்கு தமிழ் மற்​றும் ஆங்​கிலம் மொழி​யில் பயிற்​று​விக்​கப்​படும். இந்​நிறு​வனத்​தில் அச்​சு, தொலைக்​காட்​சி, வானொலி மற்​றும் இணைய ஊடகங்​களில் பணிபுரிவதற்​கான திறமையை வளர்த்​துக்​கொள்​ளும் வகை​யில் பாடத்​திட்​டம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. சர்​வ​தேச கல்வி நிறு​வனங்​களு​டன் இந்​நிறு​வனம் ஒப்​பந்​தம் செய்​து​கொள்ள உள்​ளது.

இந்​நிலை​யில், இந்த கல்வி நிறு​வனத்தை கோட்​டூர்​புரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​து, பார்​வை​யிட்​டார். தொடர்ந்​து, இக்​கல்வி நிறு​வனத்​தில் இதழியல் முது​நிலை பட்​டயப் படிப்​பில் முதலா​மாண்டு சேர்க்கை பெற்ற மாணவ, மாண​வியர்​களிடம் முதல்​வர் கலந்​துரை​யாடி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், மா.சுப்​பிரமணி​யன், செய்​தித்​துறை செயலர் வே.​ராஜா​ராமன், சென்னை இதழியல் நிறு​வனத்​தின் சிறப்பு பணி அலு​வலர் எஸ்​.ஏ.​ராமன், செய்​தித்​துறை இயக்​குநர் இரா.​வைத்​தி​நாதன், சென்னை இதழியல் கல்வி நிறு​வனத்​தின் நிர்​வாகக் குழுத் தலை​வர் என்​.ர​வி, தலைமை இயக்​குநர் ஏ.எஸ்​.பன்​னீர்​செல்​வன் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்.

நன்றி

Leave a Reply