அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு X செய்தியை வெளியிட்ட ஜனாதிபதி, அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
சமூகத்தில் வன்முறை மற்றும் வெறுப்புக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தி, அவஸ்திரேலியாவுடன் இலங்கை தொடர்ந்து ஒற்றுமையாக நிற்கும் என்று ஜனாதிபதி கூறினார்.

