அவுஸ்திரேலியா சிட்னி கடற்கரையில் தீவிரவாத தாக்குதல் – 11 யூதர்கள் கொல்லப்பட்டனர் – Lanka Truth | தமிழ்

அவுஸ்திரேலியாவில் சிட்னி கடற்கரையில் நேற்று (14) தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 யூதர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஆலயத்தை மறுஅர்ப்பணம் செய்ததைக் குறிக்கும் வகையில், ‘ஹனுக்கா’ திருவிழாவை யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், ஒரு வாரம் நடைபெறும் ஹனுக்கா திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான யூதர்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில், மாலை 6.40 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். போலீஸார் விரைந்து சென்று, மர்ம நபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு நபர் படுகாயங்களுடன் பிடிபட்டார்.


1

நன்றி

Leave a Reply